24 மணி நேரத்திற்குள் மாற்றப்பட்ட முடிவால் கடும் கோபத்தில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட மாற்றம்

881shares

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் நாராஹென்பிட்டி அபயராம விகாரைக்கு வந்து, தன்னை சந்தித்து, இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக கூறிய விஜேதாச ராஜபக்ச, அதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக விஜேதாச ராஜபக்சவை மீண்டும் சந்திக்கும் வரை ஆனந்த தேரர் பொறுமை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

24 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிய விஜேதாச ராஜபக்ச போன்றவர்களின் வார்த்தைகள் மீது எவ்விதத்திலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஆனந்த தேரர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது ஜனாதிபதி தனது கைகளாலேயே தனது கழுத்தை அறுத்துக்கொள்வதற்கு ஈடானது என விஜேதாச ராஜபக்ச கூறியிருந்ததுடன் அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்