பேலியகொட கொரோனா தொற்றாளர் மன்னாரில் பதுங்கியிருந்தவேளை பிடிபட்டார்

45shares

கொழும்பு பேலியகொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த நபர் ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தங்கி இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை மேலும் தெரிவிக்கையில்

குறித்த நபர் கொழும்பு பேலிய கொட மீன் சந்தைப் பகுதியில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் குறித்த நபர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தவர் என்ற நிலையில் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் கந்தக்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

குறித்த நபருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் ஏனையோரை பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி