யாழில் பொறியியலாளரின் மனைவிக்கு கொரோனா இல்லை -வெளிவந்தது அறிக்கை

104shares

நெடுங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மனைவியான சட்டத்தரணியிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

சட்டத்தரணி தொடர்ந்தும் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 14 நாள்களில் அவரிடம் இரண்டாவது தடவை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் கடந்த வாரம் நீதிமன்றுக்கு சென்று வந்த நிலையில் தற்போதைய நிலையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

சட்டத்தரணி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு செவ்வாய், புதன்கிழமை வருகை தந்துள்ளார்.

அத்துடன், சாவகச்சேரி நீதிமன்றுக்கும் சென்றுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி