யாழில் கொரோனா அச்சம் - சுகாதார திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்

453shares

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர் பகுதியில் நேற்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முடக்குவதற்கான விண்ணப்பம் மத்திய சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பேண இன்றைய தினம் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக யாழ். மாநகர முதல்வர், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ். பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அப்பகுதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைப்பதாகவும் குறித்த பகுதிக்கான பேருந்து சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்வது எனவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குருநகரில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு மாகாண சுகாதார திணைக்களம் கொரோனா ஒழிப்பு செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்