அவதானமாக இருங்கள் - யாழ் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

365shares

யாழ். குருநகர் மற்றும் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் எச்சரித்துள்ளார்.

இதேவேளை மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து அங்கு அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்.

குருநகர் மற்றும் பாசையூர் மீன் சந்தை பகுதியைச் சேர்ந்தவர்களோ அல்லது வெளியிடங்களிலிருந்து வருவோர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

குறித்த நடைமுறை நாளை காலையிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே இப்பகுதிக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற்கொண்ட பின்னரே அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!