அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

534shares

தாதியர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டே தினங்களில் அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு - நாரஹென்பிட்டிய அபயராமய விகாரையின் விகாராதிபதியும், ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதற்கு அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவையும் தேரர் விதித்துள்ளார்.

48 மணி நேரத்திற்குள் தீர்வை வழங்காவிட்டால் பாரிய வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தாதியர்களில் பலருக்கு வழங்க வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள், போக்குவரத்து என பல விடயங்கள் தடைபட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தவறாமல் பணியில் ஈடுபட்ட தாதியர்கள் பலருக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்க தவறிவிட்டதாக சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேரர் தெரிவித்துள்ளார்.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்