ஒருபோதும் அனுமதிக்காது அமெரிக்கா -உறுதிபடத் தெரிவித்தார் பொம்பியோ

735shares

“பல நூறு உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட அடிப்படைவாத வன்முறைகளையும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது" என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கான விஜயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடுகையிலேயேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று மாலை அணிவித்து வழிபட்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற இடங்களையும் பார்வையிட்டேன். பல நூறு அப்பாவி மக்களின் உயிர்கள் அந்த தாக்குதலின் போது காவு கொள்ளப்பட்டன.

வன்முறை மற்றும் தீவிரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இந்த அடிப்படைவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் அமெரிக்கா இலங்கை மக்களுடனும் துணை நிற்கின்றது என தெரிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி