அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

454shares

தற்போது உள்ள நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் கடமைகளை ஆக கூடிய வகையில் நிறைவேற்றுவதில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அரச சேவை, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ரத்னசிறி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சில இடங்களுக்கு ஊரடங்கு தனிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அலுவலகங்களிலும் சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்கள் தற்போதைய சூழலை மிகக் கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி நடத்தி செல்லும் தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் கடமைகளை ஆக கூடிய வகையில் நிறைவேற்றுவதில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகின்றேன்.

இந்த நிலையில், கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் பிரதானிகளினால் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 2020 ஏப்ரல் 18 திகதி மற்றும் 2020 மே மாதம் 14 ஆம் ஆகிய சுற்றறிக்கைகளில் கவனம் செலுத்தி அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் மற்றும் நிறுவனங்களை நடத்தி செல்வதுடன் அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிட்டபடி அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்காக கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி