கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படும் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட மர்மப் பெட்டி!

341shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் வயல் காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரும்புப் பெட்டி ஒன்று புதைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

நேற்றைய தினம் விவசாயி ஒருவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து படையினர் அதனை மீட்ட போது குறித்த பெட்டியில் மண் நிரம்பிக் காணப்பட்டது என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுணதீவு, அரசடிச்சேனை வயல் பகுதியிலேயே இரும்புப்பெட்டி புதைந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில், வயல் வேலைக்கு சென்ற விவசாயி அதனை அவதானித்ததையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து நீதிமன்ற அனுமதியினை பெற்று வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்பைடையின் குண்டு அகற்றும் பிரிவினரால் குறித்த பெட்டி நேற்று மாலை 6 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் போது அதில் மண் நிரம்பியிருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த பெட்டி ஆயுதங்கள் வைக்க பயன்படுத்தும் இரும்பு பெட்டி என்பதுடன் இப் பிரதேசம் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!