தூக்கில் தொங்கிய பிக்கு: பொலிஸார் வௌியிட்ட காரணம்

668shares

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியின் சடலத்தினை மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த தேரரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.

லங்காதுறையில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு