மாவீரர் பண்டிதரிற்கு விளக்கேற்றி வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

166shares

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை இரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பண்டிதரை நினைகூரும் வகையில், அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற சுமந்திரன் பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பில் அவரது தாய் கருத்து வெளியிடுகையில், உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும் மகனுக்காக துயிலும் இல்லத்தில் சென்று நான் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். இருப்பினும் நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளேன். அதனை யாரும் தடை செய்யக் கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்