இலங்கை மக்கள் என்ன சோதனை எலிகளா? நாமல் காட்டமான கேள்வி

148shares

கொரோனா வைரஸ் மருந்தினை பரிசோதிப்பதற்கான பரிசோதனை எலியாக இலங்கையர்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளிக்கும் வரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்தப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் பொது அவர் இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த மருந்தினையும் இலங்கை பயன்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனமோ அல்லது உலக நாடுகளோ எந்த கொரோனா மருந்திற்கும் அங்கீகாரம் வழங்கவில்லை. இதன் காரணமாக இலங்கை அந்த மருந்தினை பெற்று மக்களிற்கு வழங்க கூடிய நிலையில் இல்லை.

கொரோனா வைரஸ் மருந்தினை பரிசோதிப்பதற்கான பரிசோதனை எலியாக இலங்கையர்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் சிலவகை நோய்களிற்கான மருந்துகளை இலங்கையில் சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்