மாத்தறையில் பயங்கர விபத்து! 20 நிமிடங்கள் போராடிய மீட்புக்குழு - ஐவர் படுகாயம்

116shares

மாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் எலியகந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தக்காலி எடுத்துச் சென்ற லொறி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற பின்னர் 20 நிமிடங்கள் போராடி லொறியில் சிக்கியிருந்த சாரதி மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மாத்தறை, பண்டத்தர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்