நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்கள்! அனைவரும் பத்திரமாக மீட்பு

464shares

ஓமன் கடலில் மூழ்கிய இலங்கைப் படகு ஒன்று நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய நாடுகளில் இருந்து அதிகமான சிறு கப்பல் மற்றும் படகுகள் அதிக அளவில் வர்த்தக தேவைகளுக்காக மஸ்கட் பகுதிகளுக்கு வந்து சென்றவாறு உள்ளன.

இதேபோல் இலங்கை நாட்டைச் சேர்ந்த மரத்திலான படகு ஒன்று காரை ஏற்றிக்கொண்டு மஸ்கட் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

திடீரென சூறாவளிக் காற்று வீசியதால் அந்தப் படகால் தொடர்ந்தும் பயணம் செய்ய முடியவில்லை.

இதனால் நீரில் கவிழ்ந்து மூழ்க படகு மூழ்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த படகு ஊழியர்கள் ‘மே டே’ எனப்படும் அவசர காலத்தில் அளிக்கப்படும் சமிக்ஞையை வெளியிட்டனர்.

தகவலறிந்த மஸ்கட் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த இடத்தை நோக்கி மீட்பு குழுவினருடன் சென்றனர்.

அதற்குள் அந்தப் படகு மூழ்கும் நிலையில் இருந்தது. உடனடியாகவே தத்தளித்துக்கொண்டு இருந்தவர்களை நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்டு மிதவைகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.

அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. பின் கடலில் மூழ்கிய படகும் பத்திரமாக மீட்கப்பட்டது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்