நல்லூரில் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் அஞ்சலி!

287shares

மண்விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் அஞ்சலி செலுத்தும் வாரமாக உள்ளது. அந்த வகையில் ஆரம்ப நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தீயாக தீபம் தீலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நல்லூர் திடலிலேயே குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்து.

குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், அரசியல் குழு உறுப்பினர் பொன்.மாஸ்டர், யாழ். மாநகரசபை உறுப்பினர் ரஜீவ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஞானேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு சிலர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்