இதற்கான பலன் ஒரு வருடத்தின் பின்னரே கிடைக்கும் - கெஹலிய

38shares

வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள் ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், எதிர்க் கட்சியினர் வரவு செலவுத் திட்ட யோசனைகளை இலக்கங்களாலும் கணக்கு அறிக்கைகளாலும் விமர்சித்து வருகின்றனர்.

இவர்களின் வாதம் ஒரு வருடத்துக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், ஒரு வருடத்துக்குப் பின்னரே இந்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் வெற்றியடைந்துள்ளதா அல்லது தோல்வியுற்றுள்ளதா என தெரிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைனளை எதிர்க்கட்சியில் சிலர் கனவு என்றே தெரிவிக்கின்றனர். ஆனால், கனவுகளை நனவாக்கும் குழுவே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்