தப்பி ஓடிய பெண்! களத்தில் இறங்கியது புலனாய்வுப் பிரிவு

60shares

ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து இரண்டரை வயது மகனுடன் தப்பி ஓடிய பெண்ணைக் கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகம் - 011 2421111, பொலிஸ் அவசர பதிலளிப்பு பிரிவு -011 2433333 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தரும்படி பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எஹலியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பெண் தனது மகனுடன் பஸ்சில் தனது ஊருக்குச் சென்றுள்ளதுடன், அங்குள்ள உறவினர் ஒருவருன் வீட்டில் அவரது மகனை ஒப்படைத்து விட்டு அவர் அங்கிருந்து சென்றிருந்தார்.

பொலிஸாரின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று காலை குறித்த பெண்ணின் மகனை எஹலியகொட, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து அடையாளம் கண்ட பொலிஸார், அவரை மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் இருந்த வீட்டாரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

எனினும் சிறுவனின் தாய் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து இவரை தேடும் பணியில் விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது, புலனாய்வுப் பிரிவினரின் தேடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்