மனோ கணேசன் ஒரு முட்டாள் - நாடாளுமன்றில் விமர்சித்த அமைச்சர்

95shares

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒரு முட்டாள் என அமைச்சர் விமல் வீரவன்ச இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு – 15, அளுத்மாவத்தை – இப்பாவத்த பிரதேச மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அந்த மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச

ஒரு மாதத்திற்கான நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட 5000 ரூபாவை ஒரே வாரத்தில் செலவு செய்துவிட்டுத்தான் மேலும் நிவாரணங்களைக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் இதனைப் பிரச்சினையாக சபை நடுவே கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒருமுட்டாள் என்றும் அவர் விமர்சனம் வெளியிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்