கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா

45shares

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 266 பேருக்கு கொவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்படி வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் மரணமடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த குறித்த நபரின் மகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.

அத்துடன் கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்