இலங்கையை வெளிநாட்டு குப்பை தொட்டியாக்கிய ஜே.ஆர் அரசு - அதாவுல்லா

20shares

ராஜபக்ச குடும்பம் எப்பொழுதும் மனிதாபமுள்ளவர்கள் என்பதோடு மதங்களை மதிப்பவர்கள். கொரோனாவினால் மரணிப்போரை எரிக்கும் விடயத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

வள நிலங்களில் முடியுமான எல்லாவற்றையும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயிகள் தமது உற்பத்திகளை நாடுமுழுவதற்கும் ஏற்றுமதி செய்த காலமொன்று இருந்தது.

ஆனால் ஜே.ஆர் அரசு இலங்கையை வெளிநாட்டு குப்பை தொட்டியாக்கியது.

எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதால் நாட்டு மக்கள் சோம்பேறிகளாக மாறுவர்.எமது காணிகளை வெளிநாடுகளுக்கு விற்கும் தலைவர்கள் கடந்த காலத்தில் இருந்தனர்.

08 வீதம் இருக்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விடுத்து கிடைக்கும் சம்பளத்தில் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அன்று 95 ரூபா சம்பளம் வாங்கிய ஆசிரியர் ஒருவருக்கு மாத இறுதியில் மிச்சமிருந்தது.

ஆனால் ஒவ்வொரு பட்ஜட்டிலும் சம்பள உயர்வு பற்றி தான் பேசுகிறார்கள்.அந்த கலாசாரத்தை மாற்றி சம்பளத்தில் வாழும் வகையில் நியாயமான விலையில் பொருட்கள் சந்தையில் இருக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் சந்தர்ப்பமான இந்த வரவு செலவுத்திட்டத்தை பார்க்கிறேன்.இன்று கொரோனா நிலைமைக்குள் வாழப் பழக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

நமது மக்களுக்கு தேவையான உணவுத் தேவைகளை இங்கே நிறைவு செய்ய வேண்டும்.அரசாங்கம் கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்கிறது.

மரணித்தவர்களின் உடல்களை எரிக்கின்ற ஒரே ஒரு விடயத்தில் தான் குறைபாடு இருக்கிறது.நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களும் மதவழிபாடுகளை மதிப்பவர்களாக உள்ளனர்.இந்தக் குறை விரைவில் தீரும் என நம்புகிறோம் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்