தமிழர்களின் நிலம் அபகரிக்கப்படும் போதுதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது! சபையில் செல்வம்

30shares

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களை நினைவு கூர ஏன் தடைவிதிக்கிறீர்கள்? என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,

ஹாட் அட்டாக் வந்தவர்களைக் கூட நாடு நினைவுகூருகிறது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவது தடைப்படும் அவலநிலை நாட்டில் காணப்படுகிறது.

ஜே.வி.பியினர் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.

எனினும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு ஏன் தடையாக இருக்கின்றீர்கள் .

வடக்கு கிழக்கில் கடற்றொழில் மற்றும் விவசாயம் என்பன மக்களின் வாழ்வாதாரத் தொழில்களாகக் காணப்படுகின்றன. விவசாயத்தை எடுத்துக் கொண்டால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு வரிச் சலுகை கொடுக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளபோதும், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன.

விவசாய உற்பத்திகளை வரியில்லாது நீக்க வேண்டுமாயின் எங்கள் மக்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வேண்டும். அந்த நிலத்தை வன இலாகா அபகரித்துக்கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு கால்நடை என்பதும் பிரதான விடயமாகும். கால்நடைக்கான மேய்ச்சல் தரைகள் பாரிய பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. கால்நடைகளை மேய்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

தமிழர்களின் நிலம் அபகரிக்கப்படும்போதுதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது. இந்த நிலைமையை அரசாங்கம் மீண்டும் அதிகரிக்கக் கூடாது. விவசாயிகளின் காணிகள் வனபரிபாலனத் திணைக்களத்திடமிருந்து நீக்கப்பட்ட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் உள்ள சகல விவசாயிகளும் கடனாளிகளாகவும், ஏழைகளாகவும் காணப்படுகின்றனர். நெல்லுக்கு நியாய விலையை வழங்கி உரிய விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது