உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சஹ்ரான் ஹாசிமின் திட்டமல்ல! தொடரும் மர்மம்

54shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது சஹ்ரான் ஹாசிமின் திட்டமல்ல அது கண்ணுக்கு தெரியாத சக்தியொன்றின் தீர்மானம் என சிஐடியின் முன்னாள் அதிகாரி ரவிசெனிவரட்ண தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் சாட்சியம் வழங்கிய அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் கொல்லப்பட்டும் கைசெய்யபட்ட போதிலும் இந்த தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி இன்னமும் உயிருடன் இருக்கின்றார்.

சஹ்ரான் ஹாசிமை வழிநடத்திய சக்தியொன்று உள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்கான கடுமையான முயற்சிகள் நான் ஒய்வுபெறும் வரை இடம்பெற்றது.

வவுனதீவு, மாவனல்ல, வானத்துவில்வு சம்பவங்கள் குறித்தும் தாழம்குடா சைக்கிள் குண்டுவெடிப்பு குறித்தும் சிஐடியினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது சகாக்கள் காரணம் என்பது தெரியவந்தது. சிஐடி இது குறித்து தீவிர கவனம் செலுத்தியது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்