அலுவலக தொடருந்து சேவைகள் நாளை முதல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த தொடருந்து சேவைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் குறிக்கப்பட்ட இடங்கள் தவிர ஏனைய இடங்களில் தளர்த்தப்படுகின்றமையினாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையிலும் இந்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.