ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அரசு நிறுவனங்களின் அனைத்து விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி பி ஜெயசுந்தர அனைத்து அரச நிறுவனங்கள், முகவர் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நவம்பர் 18 திகதியிட்ட கடிதத்தின் நகலை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார், விளம்பர பணத்தை "நட்பு ஊடக நிறுவனங்களுக்கு" நேரடியாக அனுப்புவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா இது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Pres @GotabayaR has ordered all gov n SOE advertising be stopped immediately. Upon Treasury approval some may be approved on a case by case basis f 2021. T question is, is this t plan to direct billions of advertising money to select friendly media institutions? Muzzling t media. pic.twitter.com/1PFoQ0aqMC
— Harsha de Silva (@HarshadeSilvaMP) November 25, 2020