சகோதர தமிழ் மக்களே! உங்கள் மீது கோபமில்லை - பௌத்த தேரரின் அன்பு மடல்

897shares

உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார்.

தனது முகநுல் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்,

எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு நான் அன்போடு எழுதுகின்றேன்,

உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லை

ஏனென்றால் நீங்களும் உங்கள் இறந்த மக்களும் இந்த நாட்டில் பிறந்த எங்கள் சகோதர சகோதரிகள் போல தான்.

சிங்கள மக்களைப் போலவே நீங்களும் இந்த நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஏனென்றால் இது உங்களுக்கும் எங்களுக்குமான நாடு.

நீங்கள் தமிழ் என்பதால் எங்களுக்கு உங்கள் மீது வெறுப்புகள் இல்லை.

நாம் ஒரு உண்மையான பௌத்தர்களாக இருந்தால் அவ்வாறு செய்வதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் வாய்ப்பும் இல்லை.

உங்கள் சகோதரத்தின் கைகளை நாங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டோம்.

உங்கள் சகோதரத்துவத்தை தழுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை. எனது நாடு என்ற வார்த்தையை விட

எங்கள்நாடு என்ற வார்த்தையை நேசிப்போம்.

எல்லா தவறான எண்ணங்களிலிருந்தும் விடுபடுவோம். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்