விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுபவர்கள் - அவர்களது சகாக்களுக்கு எதிராக இன்டர்போல்! இலங்கையில் எச்சரிக்கை

358shares

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிசேகரிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நேற்றைய தினம் நியமனம் பெற்ற அவர் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார். இதன்போது பேசிய அவர்,

வெளிநாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல், சிஐடி மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளோம்.

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர். இது சட்டவிரோதமானது என்பதால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளோம்.

விடுதலைப்புலிகளிற்கு நிதி திரட்டுபவர்கள் மற்றும் ஸ்ரீலங்காவில் வாழும் அவர்களது சகாக்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரும் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவல்கள் எதிர்காலத்தில் மிகவும் பயன் அளிக்கும் என நம்புகிறேன்.

முன்னைய அரசாங்கம் இவர்கள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை இதனால் இந்த வலையமைப்பு விரிவடைந்துள்ளது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்