எவருக்கும் எனது நிலை ஏற்படக்கூடாது - கருக்கலைந்த இளம்பெண் கவலை

476shares

கணவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தலுக்காக அழைத்து சென்ற தனக்கு, அதிகாரிகளின் கவனயீனத்தினால், கர்ப்பம் கலைந்துள்ளதாகவும் இனி எவருக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் களனி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத் தலைவி கவலையுடன் தெரிவித்துள்ளார்.

களனி – பெத்தியாகொட பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத் தலைவிக்கே இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற அதிகாரிகள், தமது கோரிக்கைகளை செவிமடுக்க மறுத்து விட்டதாக ஆரம்ப பாடசாலை ஆசிரியையான 21 வயதான கவிஷா மதுஷானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த மனைவியின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் பணிபுரிவதுடன், அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 24ம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், குறித்த நபரின் குடும்பத்தாரை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, களனி பகுதியிலிருந்து தியத்தலாவை முகாமிற்கு குடும்பத்தார் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

முகாமில் வைத்து நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், குடும்பத்திலுள்ள எவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த குடும்பத்தை மீண்டும் களனி பகுதியிலுள்ள அவர்களது வீட்டிற்கு அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிறைவு பெற்றதன் பின்னர், குறித்த யுவதிக்கு இரத்த கசிவு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், குறித்த யுவதியின் கர்ப்பம் கலைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் தமது வீட்டிலேயே பி.சி.ஆர் பரிசோதனை நடத்தியிருந்தால், கர்ப்பம் கலைந்திருக்காது என அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இனி எவருக்கும் இவ்வாறான சம்பவங்கள் நேராத வகையில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு