ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தகவல் - முழு விபரம் உள்ளே

588shares

கொழும்பு மாவட்டத்தில் பெட்டா, Foreshore மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மற்றும் ராகம பகுதிகளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன.

அந்த வகையில், நாளை அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு நீக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மட்டக்குளி பொலிஸ் பகுதியில் உள்ள ராண்டியா உயன வீட்டுத் திட்டமும் பெர்கியுசன் சாலையின் தெற்குப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி தெரிவித்தார்.

எனினும், மீதமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து அடுத்த புதன்கிழமை ஆராயப்படும் என்றும், அந்த பகுதிகள் தனிமையில் இருந்து விடுவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்