இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

421shares

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகின்ற காரணிகளை கண்டறிந்து, அவற்றுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் தயார் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார்.

நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிககையில்,

பல்வேறு வகையில், இருதரப்பினதும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்து சமுத்திர வலயத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னோக்கி கொண்டு செல்லல் மற்றும் இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதி வேலைத்திட்டங்களை, விரைவில் நிறைவு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில், தற்போது காணப்படுகின்ற இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்