“இலங்கை தோல்வியடைந்த நாடு” என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாக நாடாளுமன்றில் கடும் தர்க்கங்கள் இடம்பெற்றது.
குறித்த கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் முயன்றதால் நாடாளுமன்றத்தில் குழப்பநிலை நிலவியது.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரை காரணமாக அவையில் குழப்பநிலையேற்பட்டது.
நாட்டிற்கான தனது கடமையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது,என்பதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என குறிப்பிட்டிருந்த சஜித் பிரேமதாச,
நாட்டின் இரண்டாவது மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார நிலை குறித்த புள்ளி விபரங்களை நாட்டிற்கு - நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டிய சபாநாயகர் “இலங்கை தோல்வியடைந்த நாடு என நீங்கள் தெரிவித்திருப்பது தவறு ஆகவே உங்கள் உரையிலிருந்து இதனை அகற்ற அனுமதியுங்கள்” எனக் கோரினார்.
எனினும் எதிர்கட்சி தலைவர் தான் ஒருபோதும் இலங்கை தோல்வியடைந்த நாடு எனக் குறிப்பிடவில்லை என தெரிவித்ததுடன் அரசாங்கத்தின் தோல்வியடைந்த, திறமையற்ற செயற்பாடுகளையே குறிப்பிட்டேன் எனத் தெரிவித்தார்.
எனக்கு ஆங்கிலம் தெரியும் - எனது மொழியாற்றலுக்கு மதிப்பளியுங்கள், நான் தோல்வியடைந்த நாடு என ஒருபோதும் குறிப்பிடவில்லை என உறுதியாகத் தெரிவித்தார்.
You May Like This Video