புலம்பெயர் தமிழர்கள் தயார்! ஆனால் இலங்கையின் நிலை?

789shares

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ளனரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

இருப்பினும் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மை பிரச்சினையாக உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம், கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர்,

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. ஆனால், யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னரும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் இராணுவ முகாமே உள்ளது.

அதற்கான வெளிநாட்டு முதலீடுகளுக்கு எமது மக்கள் தயாராக உள்ளனர். எனினும், அதனை தடுக்கும் சக்திகளே அதிகமாகும்.

இவ்வாறு கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகளையேனும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

வடக்கு கிழக்கில் பல பண்ணைகள், தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் தொழில் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக முடக்கப்பட்டு வருகின்றது.

இதனை அரசாங்கம் கருத்திற்கொண்டு அரசியல் ரீதியாக பார்க்காது ஜனநாயக அடிப்படையில் செயற்படுத்த வேண்டும்.

வடக்கிலோ கிழக்கிலோ கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதனால் குறைந்தது இருபதற்கும் குறையாத தொழில் முயற்சி உருவாக்கப்படும். எமது மக்களின் விருப்பம் இது. அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!