யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டது செம்மஞ்சள் எச்சரிக்கை!

410shares

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த எச்சரிக்கையானது இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன் இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன் அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 38 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 959 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 393 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 62 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 535 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு