பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

627shares

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராயப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசியானது, குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கும் என இலங்கையை பூர்வீகமாக கொண்ட டாக்டர் மஹேஷி ராமசாமி தெரிவிக்கின்றார்.

லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவுடன் வீடியோ தொழில்நுட்பத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், குறித்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் இலங்கையர் ஒருவர் இணைந்துள்ளமையை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர், தான் இலங்கைக்கு வருகைத் தர எதிர்பார்த்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி மஹேஷி ராமசாமி தெரிவிக்கின்றார்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அவர், கொழும்பு விசாகா கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன், தனது சாதாரண தர பரீட்சையை ஸ்டெப்ர்ட் சர்வதேச கல்லூரியில் எழுதியுள்ளார்.

அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தடுப்பூசியை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் பயன்படுத்த முடியும் என ஓளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் தரப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வவுனியாவில் இரவு இடம்பெற்ற துயரம் - பரிதாபகரமாக பறிபோன இளைஞனின் உயிர்

வவுனியாவில் இரவு இடம்பெற்ற துயரம் - பரிதாபகரமாக பறிபோன இளைஞனின் உயிர்

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்

பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்