கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

335shares

சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதிக்குள் முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2020 வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் போது மேலும் தெரிவிக்கையில்

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதை அனைவரும் அறிய ஆவலாக உள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதிக்குள் திகதியை அறியத்தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார அதிகாரிகள் பச்சை விளக்கு காட்டியவுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த விரும்பாததால் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதை அரசு தாமதப்படுத்திவருகிறது என்றார் அமைச்சர்.

"மக்கள் என்ன சொன்னாலும் நாங்கள் இப்போது கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும். எனவே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலையத்தை மீண்டும் திறக்க நம்புகிறோம், ”என்றார்.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 50,000 இலங்கையர்களை அரசாங்கம் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 40,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்