தற்போதைய அரசாங்கம் எம்மால் உருவாக்கப்பட்டதே என ஶ்ரீலங்கா சுதந்தர கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அதனால் இதனையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வது என்பதே தற்போது எமக்குள்ள சவால் எனவும் இதற்காக தாம் அனைவரும் தீவிரமாக செயற்பட்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது - 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்தர கட்சிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.