முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி துணைவேந்தரின் அறிவுறுத்தலின் பேரில் இடித்தழிக்கப்பட்டதையடுத்து மாணவர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே பிரதான மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்ததோடு, பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று பாரை 6 மணி முதல் மாரை 6 மணி வரையான முழு கதவடைப்பிற்கு அறை கூவல் விடுத்திருந்தோம்.
அதன் காரணமாகவே துணைவேந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததோடு, காலை 7 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
எனினும் ஆரம்பித்துள்ள இப்போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.