சுமந்திரனை அயோக்கியன் என்றும், சிங்களத்தின் எடுபிடி, கைக்கூலி, வழிப்போக்கன் என்றும் ஊடகங்களில் உரைத்த சிவகரன், நீதி கோரல் விடயத்தில் எப்படி சுமந்திரனுடன் கைகோர்த்தார்? என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தெடரில் ஸ்ரீலங்காவை வலிந்து பொறுப்புக் கூறவைக்கும் தீர்மானத்திற்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் அவருக்கு சார்பானவர்களும் தீர்மானித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு ஒரு வருட கால அவகாசத்தை தமிழ்த் தரப்பு வழங்க கூடாது எனவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பில் பொதுச் சபையில் கையளிக்கப்பட்டு ஒரு வருட கால அவகாசத்துடன் பொது சபையில் கையளிக்கப்பட்டு ஒரு வருட கால அவகாசத்துடன் கோரிக்கை முன்வைக்கப்பபோவதாக தாம் அறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.