யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு எழுந்ததை அடுத்தே இந்த விடயத்தை சற்று தணிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.
இதையடுத்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மாணவர்கள் பலர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மேலிடத்தின் உத்தரவிலேயே இதை செய்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார். எனினும் அவராகவே திடீரென பல்கலை மாணவர்களை சந்தித்து மீண்டும் நினைவுத்தூபி அமைக்க உறுதியளித்ததுடன் அடிக்கல்லினையும் நாட்டியமை குறிப்பிடத்தக்கது.