அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த தவறுகளும் செய்யாத பல மதகுரமார்கள் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் தமிழர்களுக்கு ஒரு சட்டம் செயற்படுத்துகின்றது. இவ்வாறான சூழ்நிலை மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.