நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49, 848ஆக அதிகரித்துள்ளது.