உச்ச நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ள ரஞ்சன் ராமநாயக்க 11 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றையதினம் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இ்ன்னும் 06 மாதங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நீதித்துறையை அவதூறு செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதேவேளை சட்டவல்லுனர்கள், ரஞ்சன் ராமநாயக்க தனது நான்கு வருட சிறைவாசத்தை முடித்து வெளியே வந்தாலும் அவர் தனது சிவில் உரிமைகளை இழக்க நேரிடும் எனவும் இது தொழில்நுட்ப ரீதியாக அவரை 11 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து வெளியேற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ரஞ்சனின் சட்டவல்லுனர்க்ள குழு தெரிவித்துள்ளது.