தனது பேஸ்புக்கில் வெறுப்பேற்றும் வகையில் பதிவிட்ட முஸ்லிம வர்த்தகரான பவாஸ் மொகமட் நிஸார் என்பவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொழிலதிபர் தனது தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் புத்த பிக்குகள் மற்றும் பிற நபர்களை இழிவுபடுத்தும் வகையில் இனப் பதட்டங்களை அதிகரிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) சட்டத்தின் கீழ் தொழிலதிபர் குற்றம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்..
தற்போது குறித்த தொழிலதிபரின் பல்வேறு தொழில்கள் தோல்வியுற்ற போதிலும் சந்தேக நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய சிஐடி அதிகாரிகள், அந்த நபர் தனது வாழ்க்கை முறைக்கு சட்டவிரோத முறையில் பணம் வாங்கியிருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.
சி ஐ டி அதிகாரிகளின் கருத்தை கவனத்தில் எடுத்த கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹால் சந்தேக நபரை விளக்கமறியலில் வக்க உத்தரவிட்டதுடன், மேலும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிஐடிக்கு உத்தரவிட்டார்.