கோட்டாபயவின் பேச்சுக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட சஜித் அணி

450shares

அம்பாறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இன்றையதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்மொன்றை மேற்கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இந“த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சிவப்பு பாதுகாப்பு ஜக்கெட்டுகளை அணிந்திருந்தனர், நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த எதிர்ப்பு எனக்கு எதிரான ஜனாதிபதியின் கூற்றுகளுக்கு எதிரானது மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாகவும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ தெரிவித்தார்.

"எம்.ஜே. ராமநாயக்க தொடர்பாக சட்ட நடைமுறைகளில் எமது கட்சி தலையிடவில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமைக்காக அவர் நிற்கிறார்," என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு நகரத்திலும் பேச்சு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து மேலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை