நோயாளிக்கு கொரோனா - மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி மூடப்பட்டது

16shares

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகள் முருங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற ஒருவர் நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (13) முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்ச நிலை அங்கு ஏற்பட்டுள்ளதோடு, நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகளிடம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை