யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா என அனைத்து இடங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

63shares

மன்னாரில் கடந்த சில நாட்களில் கொரோனாவால் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பெண்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.

அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு இன்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 60 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு