கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க எப்போது விடுதலையாவார் -வெளிவந்தது விபரம்

193shares

நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது தொடர்பான விபரம் வெளிவந்துள்ளது.

இதன்படி ரஞ்சன் ராமநாயக்க தனது சிறைத் தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவருக்கு, வருடமொன்றில் 8 மாதங்கள் மாத்திரமே தண்டனை காலமாக கருதப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடக செயலாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் சிறைத் தண்டனை காலம் ஒரு வருடமும் 4 மாதங்களினாலும் குறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, ரஞ்சன் ராமநாயக்க 2 வருடங்கள் 8 மாதங்களில் விடுதலை செய்யப்படுவார் என அவர் கூறியுள்ளார்.

சிறந்த நடத்தையுடன் செயற்படாத கைதிகளுக்கு இந்த சிறப்புரிமை வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!