பிரதமர் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவு பெண் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா

30shares

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று இன்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் ஹல்துமு்ல – ஹால்அட்டுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஹல்துமுல்ல சுகாதார சேவைப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் பொலிஸ் அதிகாரி நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது அறிக்கை இன்று வெளியானது. அதற்கு முன் அவரது திருமண நிகழ்வுக்காக ஹல்துமுல்ல பிரதேசத்தின் பல இடங்களுக்கும் சென்றுவந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பிரிவு விவகார செயலாளர் ஒருவர் உட்பட அவர் சார்பில் பணியாற்றிவரும் இரண்டாவது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்

பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்