பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் கட்டைகளால் தலையில் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பிரதி தவிசாளர் சத்தமிட்டதையடுத்து விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே வரைந்து வந்த நிலையில், அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பொத்துவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
குறித்த பிரதேச சபையில் தவிசாளர் மாற்றம் ஏற்பட இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
You May Like This Video