ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

1360shares

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 692 பேர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் ஐவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள எனவும் ஏனைய 687 பேரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் எனவும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,435 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 119 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 112 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், ஏனைய 233 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059, மற்றும் மீன் சந்தை கொத்தணியில் 37,450 இருந்து மொத்தமாக 40,509 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிரகாரம் 14 ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,231 எனவும் தெரதிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 43,266 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,718 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு