இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

1019shares

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல.

இந்த தொற்றினால் நாளாந்தம் பலர் கண்டு பிடிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

இந்த வகையில் குறித்த தொற்றை உலகிலிருந்து முற்றாக அழிக்கும் வகையில் தடுப்பூசியை பல நாடுகள் கண்டு பிடித்துள்ளன.

அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்னும் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று தடுப்பூசி இலங்கைக்கு கிடைத்துவிடும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஔடத தரக்கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.

இரண்டு விதமான தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பைஸர் மற்றும் எக்ஸ்ராசெனிகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளே அவை எனக் கூறிய இராஜாங்க அமைச்சர், இரண்டு வாரங்களில் அவற்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை